143
வடக்கு காஷ்மீரின் நவ்காம் எனும் இடத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு கடும் சண்டை நடைபெற்றுள்ளதாகவும் இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மேலும், 2 இந்திய ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே பகுதியில் நேற்றும் 2 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்ற ராணுவத்தினர் , அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் இந்தத் தாக்குதலிலும் ; பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love