ஊழல் குற்றச் சாட்டுக்களுக்கும்,இயலாமைக்கும் அமைச்சரவையை மாற்றுவது ஒரு போதும் தீர்வாகாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்அமைச்சரவை மற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பல மாத இழுபறிகளுக்கு பின்னர் இன்று அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது. இன்றைய அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களை சிறந்த முறையில் முன்னெடுக்காததன் காரணமாகவும் அவர்கள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதன் காரணமாகவுமே இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.
ஊழல் செய்ததற்காகவோ அல்லது அவரால் குறித்த அமைச்சை செய்ய முடியாது என்பதற்காகவோ ஒரு அமைச்சர் வகித்த அமைச்சை மாற்றி அவருக்கு வேறு ஒரு அமைச்சை கொடுப்பது எவ்வாறு தீர்வாகும். அவர்களை அமைச்சரவையில் இருந்தே விலக்க வேண்டும்.அதுவே தீர்வாகும். நிதி அமைச்சை செய்ய முடியாத ரவிக்கு வெளிவிவகார அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இவர் வெளிநாடுகளுடன் பேசி,எவ்வாறு இலங்கைக்கு நிதியை கொண்டு வரப்போகிறார். இதற்குள் இவர் த பேங்கர் (the banker) சஞ்சிகையின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான சிறந்த நிதி அமைச்சர் விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தகது. இது போன்று தான் ஏனைய அமைச்சர்களின் நிலை.
மஹிந்த எதிர் கூட்டணியினர் கடந்த வருடம் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தார்கள்.அது அன்று தோற்கடிக்கப்பட்டிருந்தது.இன்று அவரது அமைச்சு மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் அவர் மிகக் கடுமையான அழுத்தம் வழங்கியும் மாற்றப்பட்டுள்ளதால் அன்று தோல்வியடைந்த மஹிந்த கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று வெற்றி பெற்றுள்ளது.அன்றே எமக்கு ஆதரவு வழங்கிருக்கலாமே! இதனூடாக மஹிந்த கூட்டு அணியினர் ரவி கருணாநாயக்க மீது உண்மையாக குற்றச் சாட்டுக்களையே முன் வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வதோடு நாங்கள் நாட்டை ஒரு போதும் தவறானதன் பக்கம் வழி காட்டுபவர்களுமல்ல என்பதை அறிந்துகொள்ளலாம்.