பிரித்தானியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நடைபெற்ற இசை நிகழ்வு ஒன்றின் நிறைவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். அமெரிக்கப் பாடகி Ariana Grande யின் இசை நிகழ்வு மான்செஸ்டர் அரீனாவில் நடைபெற்றது. இந்த தாக்குதல் ஓர் தீவிரவாதத் தாக்குதல் என காவல்துறையினர் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் திரேசா மே, பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு அவசர கூட்டமொன்றை நடத்த உள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதா பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் ஓர் தற்கொலைத் தாக்குதல் என அதிகாரிகள் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.