களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி களுத்துறை சிறைச்சாலையிலிருந்து சந்தேக நபர்களை நீதிமன்றம் அழைத்துச் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சமயங் என்ற பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பாதாள உலகக் குழு உறுப்பினர்களும், இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் அங்கொட லொக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவரது நெருங்கிய சகாவான லடியா என்ற நபரையும் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போலிக் கடவுச்சீட்டு மூலம் டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த போது கைது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவத்தின் பின்னர் இவர்கள் கடல் வழியாக இந்தியா சென்று அங்கு சில காலம் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் இந்த தாக்குதலை திட்டமிட்ட டுபாயில் வசித்து வரும் தெவுந்தர தனுஸ் என்பவரிடம் செல்வதற்கு அங்கொட லொக்காவும் அவரது சகாவும் முயற்சித்துள்ளனர் எனவும் கைது செய்பய்பட்ட சந்தேக நபர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது