வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் உள்ளிட்டோர் டெல்லி நீதிமன்றில் நேற்றையதினம் முன்னிலையாகியுள்ளனர். இந்திய மத்திய உருக்கு அமைச்சராக வீரபத்ர சிங் இருந்தபோது, 10.30 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் சேர்த்ததாக சிபிஐ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது.
வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் உள்ளிட்ட 8 பேரும் வழக்கில் சேர்க்கப்பட் டுள்ளனர். சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் வீரபத்ர சிங் உள்ளிட்டோர் மே 22ம்திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இதை ஏற்று வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் உள்ளிட்டோர் டெல்லி நீதிமன்றில் முன்னிலையாகியதுடன் அவர்கள்
ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தர விட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விவாதத்தை மே 29ம்திகதிக்கு தள்ளி வைத்தார்.