176
நாட்டில் மற்றுமொரு யுத்தத்திற்கு இடமளிக்க முடியாத என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அபிவிருத்தில் இலக்குகளை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஐக்கியத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் அச்சுறுத்தல்கள் காணப்பட்டால் அந்த அச்சுறுத்தல்கள் களையப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதாகவும் சர்வதேச ரீதியிலான ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love