சவால்களை எதிர்நோக்கத் தயார் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்;க நாட்டின் பொருளாதாரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் சரியான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அந்த பயணத்தை முன்னோக்கி நகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தற்போது உலக நாடுகள் மத்தியில் சிறந்த நன்மதிப்பு காணப்படுவதாகவும் இலங்கையின் தலைவர்கள் எந்தவொரு நாட்டுக்கும் பயணம் செய்ய முடியும் எனவும் கடந்த காலங்களைப் போன்று எதிர்ப்புக்கள் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்து வந்ததாகத் தெரிவித்துள்ள அவர் ஜீ.எஸ்;.பி பிளஸ் வரிச் சலுகையும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பினை பொறுப்பேற்றுக் கொள்ளும் போது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது எனவும் ரவி கருணாநாயக்கவின் கடின உழைப்பினால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்; தெரிவித்துள்ளார்.