152
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து ஒரு வார காலத்திற்குள் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலம் தாமதிக்காது தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியும் கோரி வருகின்றார் என பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love