கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
இதனடிப்படையில் மாகாண கல்வியமைச்சில் கல்வியமைச்சர்,கல்வியமைச்சின் செயலாளர்,பிரதம செயலாளர்,மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தின் போது பட்டதாரிகளை உள்வாங்குவதறகான பொறிமுறைகுறித்து ஆராயந்து பாடங்களின் அடிப்படையில் எவ்வாறு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் இதன் போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக எத்தனை பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது மற்றும் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் முதற்கட்டமாக எந்த எந்த பாடங்களுக்கு பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோருவது என்பது தொடர்பிலும் இதன் போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக கட்டம் கட்டமாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
அத்துடன் கிழக்கு முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்காக கல்விப் பணிப்பாளரால் கடந்த சில நாட்களாக திரட்டப்பட்ட தரவுகள் நேற்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன் அதற்கமைவாகவே கிழக்கின் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதனடிப்படையில் எதிர்வரும் நாட்களுள் பட்டதாரிகளுக்கான விண்ணப்பகங்கள் கோரப்படவுள்ளன,
இதன் போது முடிந்தளவு அனைத்து பட்டதாரிகளையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிகக அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதுடன் இதற்கு ஆளுனரின் அனுமதியை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,
அத்துடன் வெட்டபுள்ளிகளை குறைத்து பட்டதாரிகளை உள்வாங்கவும் பட்டதாரிகளை உள்வாங்கியதன் பின்னர் குறித்த பாடங்களுக்கு மேலும் வெற்றிடங்கள் மீதமாயிருந்தால் அவர்களை பரீட்சையின்றி உள்வாங்கவும் நடவடிக்கையெடுக்க கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தீர்மானித்துள்ளார்,