சீனாவைச் சேர்ந்த 2 மொழி ஆசிரியர்கள் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் வைத்து இன்று கடத்தப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் போன்று ஆயுதங்களுடன் வந்த நபர்கள், சீன மொழி ஆசிரியர்களை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட இருவரும் கணவன்-மனைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலை தடுக்க முற்றப்பட்ட நபர் ஒருவரும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை..
சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு பலுசிஸ்தானில் கடும் எதிர்ப்பு உள்ளதனால் பாதுகாப்பை பலப்படுத்தும்படி சீன தூதர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.