156
இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் போன்ற நேரடியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களைக் கூட அரசாங்கம் முனைப்புடன் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Tung-Laï Margue இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love