லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிபியாவில் இருந்து சுமார் 500 முதல் 700 பேர் மத்திய தரைக்கடலில் மரப்படகு மூலம் இத்தாலி நோக்கி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த படகு லிபியா கடல் எல்லையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விப்த்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் கடலில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 3 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை மீட்கும் பணி இத்தாலிய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.