முஸ்லிம்கள் சர்வதேச சமூகத்தின் உதவியை நாட நேரிடும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உதுமா லெப்பை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுத் திட்டமொன்றை வழங்கத் தவறினால், சர்வதேச சமூகத்தில் முறைப்பாடு செய்ய நேரிடும் என குறிப்பிட்டுள்ள அவர் இனவாத அடிப்படையில் செயற்படுவோருக்கு எதிராக அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தினர் நாட்டின் பல பகுதிகளிலும் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம்கள் பங்களிப்பு வழங்கியுள்ளனர் எனவும் எனினும், முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.