175
மங்கள சமரவீர நிதி அமைச்சராக தமது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இன்iறைய தினம் காலை நிதி அமைச்சில், மங்கள சமரவீர கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் இதுவரை காலமும் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றி வந்த மங்கள அண்மையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் அடிப்படையில் இந்த புதிய பதவி வழங்கப்பட்டது. ஊடக அமைச்சர் பதவியும் மங்கள சமரவீரவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விரைவில் ஊடக அமைச்சின் பொறுப்புக்களையும் மங்கள ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love