178
நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சராக கடமையாற்றிய ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சராக இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். அண்மையில் நடைபெற்ற அமைச்சு மாற்றத்தில் ரவி கருணாநாயக்கவின் நிதி அமைச்சுப் பொறுப்பு மங்கள சமரவீரவிற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love