வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை, இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
சுவீடன் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்குறித்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார்.
மேலும் , நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் சுவீடன் தூதுவரிடம் இரா சம்பந்தன் எடுத்துரைத்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது