147
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கெதிரான வழக்கு இன்று இடம்பெறவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமைக்கான கட்டணம் செலுத்தாமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கே இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மஹிந்தவின் தேர்தல் பிரசார பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளை பயன்படுத்தியதால், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 14 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்மே மேற்படி வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love