149
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில வாரங்களாக 22 சமூக வலைத்தளங்கள் மற்றும் செயலிகளின் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தடையானது நேற்றுக்காலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களை தூண’டுவதாக தெரிவித்து முகப்புத்தகம் வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பிரபல செயலிகளுடன் பல்வேறு இதர இணையத்தளம் மற்றும் செயலிகளின் பயன்பாட்டுக்கு கடந்த ஏப்ரல் 26ம் திகதி தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love