பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் தண்டிக்கப்பட்ட தலீபான் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற பெஷாவர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் செயல்படுகிற தலீபான் அமைப்பில், முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவ முஸ்லிம்கான் அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் முஸ்லிம்கான், அப்பாவி மக்களையும், பாதுகாப்பு படையினரையும் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் அவருக்கு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. எனினும் அவரது இதனை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்தமனு மீதான விசாரணைக்கு வந்துள்ள நிலையில் முஸ்லிம்கானை தூக்கில் போட்டு மரண தண்டனை நிறைவேற்ற தடை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் பதிலளிக்குமாறு ராணுவ அமைச்சகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.