138
வடமாகாண முதலமைச்சரின், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைநிதியில், (PSDG) அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள சுமார் நூற்றி ஐம்பது குடும்பங்களின் பாவனைக்காக, 4.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்த குடிநீர்த் திட்டம், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் இன்று முற்ப்பகல் 11.30 மணியளவில் மக்கள் பாவனைக்கு சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Spread the love