181
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. சுமார் 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை சீனா நன்கொடையாக இலங்கைக்கு வழங்க உள்ளது. மழை மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவி வழங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு சீன ஜனாதிபதி Xi Jinping இரங்கல் செய்திகளையும் அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பூரண ஒத்துழைப்பு வழங்க்பபடும் என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love