அனர்த்தம் காரணமாக அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தால் சாதாரண தர, உயர்தர மற்றும் ஏனைய பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இலவசமாக வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் சேவையில் இந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத 31ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்தக் கால அவகாசம் ஜூன் மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.