178
வடமாகணத்தில் முதலாவது ” ரயலட் பார் ” தீர்ப்பாய முறைமையிலான நீதிமன்ற அமர்வு திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்றது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ” ரயலட் பார் ” தீர்ப்பாய முறைமையில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது
அதற்காக பிரதம நீதியரசரால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் கடந்த வாரம் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்நிலையில் திங்கட்கிழமை மாலை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதன அறையில் ஒன்று கூடிய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளும் ” ரயலட் பார் “ஆரம்ப அமர்வினை நடாத்தி இருந்தனர்.
அதன் போது எதிர்வரும் 12 ஆம் திகதி மாணவி கொலை வழக்கின் ஒன்பது எதிரிகளையும் யாழ்.மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு இட்டனர். அத்துடன் அன்றைய தினம் ” ரயலட் பார் ” முன்னிலையில் , குற்றபகிர்வு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும். அதன் போது சட்டமா அதிபர் சார்பிலான சட்டவாதிகளை மன்றில் முன்னிலை ஆகுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணித்திருந்தனர்.
Spread the love