138
10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பிரித்தானியாவின் வீராங்கனை ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்ற மகளிருக்கான விட்டாலிட்டி 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே அவர் வெற்றியீட்டியுள்ளார்.
ஐந்து தடவைகள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றெடுத்த ஜோ பவே ( Jo Pavey) இந்தப் போட்டித் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். 43 வயதான ஜோ சிறந்த முறையில் போட்டியில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.
இதேவேளை, 10,000 மீற்றர் ஆண்களுக்கான போட்டித் தொடரில் அன்ரூ புற்சாட் (Andrew Butchart) ) சம்பயின் பட்டம் வென்றுள்ளார். இவர் இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love