நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு குறித்த அச்சத்தினால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்ளுக்கு நிவாரணங்களை உரிய முறையில் வழங்குவதில் பிரதான தடையாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்று நிருபங்களுக்கு கட்டுப்பட்டு நிவாரணங்களை வழங்காது தாராளமாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்ட போதிலும், அதிகாரிகள் தொடர்ந்தும் அச்சத்துடனேயே இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்று நிருபத்தை மீறிச் செயற்பட்ட அமைச்சின் செயலாளர் ஒருவர் 152 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.