162
அமைச்சுக்களுக்கான வாகனங்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அமைச்சுக்களுக்காக புதிதாக வாகனங்கள் எதுவும் கொள்வனவு செய்யப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love