இந்திய மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை 4 வார இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய மத்திய விதித்த அரசு மாட்டிறைச்சிக்கு தடைக் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகின்ற நிலையில் குறித்த தடைக்கெதிராக மதுரையை சேர்ந்த செல்வகோமதி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அதில் இந்தத் தடையானது சட்டவிரோதம் எனவும் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும் என்பதுடன் உணவு என்பது தனி மனித விருப்பமாகும் எனவும் இதில் அரசு தலையிட உரிமை இல்லை என்பதனால் மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று குறித்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற போது மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்ததுடன் மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது