180
காலநிலை சீர்கேட்டினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 202 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தினால் இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலநிலை சீர்கேட்டினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 96 எனவும் 63 பேர் காயமடைந்துள்ளதுடன், 1லட்சத்து 63ஆயிரத்து 701 குடும்பங்களைச் சேர்ந்த 6லட்சத்து 29ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழை வெள்ளம் காரணமாக 1500 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 7 ஆயிரத்து 611 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love