160
சீனாவுடன் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என குறிப்பிட்டுள்ள அவர் நீதிமன்றில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் நபர்களை பரிமாறிக் கொள்ளும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீனா சென்றிருந்த போது குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டம் குறித்து பேசப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love