175
ஆளும் கட்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்திற்கான காரணம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
நேற்றைய தினம் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி ஆளும் கட்சியினருடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love