அனர்த்த நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தகவல் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பிரதமரின் அமெரிக்க பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று எனவும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் இவ்வாறு பயணம் செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள அனர்த்தம் தொடர்பில் தொடர்ச்சியாக தகவல்களை வழங்குமாறு பிரதமர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலத்தில் பிரதமரினால் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாவிட்டால், இன்னும் சில காலங்களுக்கு அவரினால் காத்திருக்க நேரிட்டிருக்கும் என கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.