162
இலங்கையர் ஒருவர் குவைட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குவைட்டின் அர்டியா பகுதியில் குறித்த இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரமொன்றில் குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குவைட் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் இலங்கையர் என தகவல் வெளியிடப்பட்ட போதிலும் அவரது ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Spread the love