முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் தூர நோக்க செயற்பாடுகளே தெண் மாகாணத்தில் பாரியளவு அழிவுகள் ஏற்படக் காரணம் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது அப்போதைய அரசாங்கம் இயற்கை பாதிப்புக்கள் மற்றும் சுற்றாடல் காரணிகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர் தாமும் அந்த அமைச்சில் அங்கம் வகித்த ஒருவரே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அப்போதைய அரசாங்கம் சுற்றாடல் காரணிகளை கருத்திற் கொண்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மானித்திருந்தால் இத்தனை அழிவுகள் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியமானது என்ற போதிலும் சுற்றாடல் காரணிகள் கருத்திற் கொள்ளப்படாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் வேறும் ஆபத்துக்களை உண்டாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.