கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் என மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மேலதிகமாக கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரியொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு பதினைந்து லட்சம் ரூபா கடனுதவி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக்கொள்வதற்கு ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் போதாத காரணத்தினால், பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் தாம் விரும்பிய ஓர் பிரிவில் கற்கையைத் தொடர முடியும் என அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.