154
இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மீட்புப் பணிகளில் ஈடுபடவும் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கு வந்த நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சப்ராஸ் சிப்பாரா மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பாகிஸ்தான் கடற்படையினருக்கு நன்றி பாராட்டியுள்ளார்.
கடந்த காலங்களைப் போன்றே பாகிஸ்தான் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love