தமிழகம் முழுவதும் விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியினால் சென்னை உயர்நீதிமன்றில் குறித்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டுக்கு பின்னர் தியாகராயநகரில் விதிமீறி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன எனவும் அதுபோன்ற கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் எவ்வித அழைப்பாணையும் அனுப்பவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் இந்த விதிமீறல்கள் அனைத்திற்கும் முழுபொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு துணைபோய் உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.