நாட்டில் மீளவும் யுத்தம் ஏற்படுவதனை தடுப்பது அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நினைவு கூர்வது போன்றே மீளவும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுப்பதுவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறான விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் அரசாங்கம் மீளவும் அவ்வாறான ஓர் துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெறக் கூடாது என்பதில் கூடிய முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரன்தலாவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய பின்னணியை உருவாக்குவது மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.