175
வெள்ள நிவாரணமாக 350 மில்லியன் ரூபாவினை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் இந்த உதவியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளார்.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர், தற்காலிக குடில்கள், சுகாதார வசதிகள் போன்றவற்றுக்காக இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மிக நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தெரிவித்துள்ள தூதுவர் கேசப் எதிர்காலத்தில் அனர்த்தங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love