முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நேரடியாக சந்திக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. மைத்திரி தரப்பு மற்றும் மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவி வரும் முரண்பாடுகளை களையும் நோக்கில் இந்த சந்திப்பு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஐக்கியப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உலகின் பலம்பொருந்திய நாடு ஒன்று மஹிந்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னதாக அனைத்து முரண்பாடுகளும் களையப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.