146
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றுக் காலை வீதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகவுமஇதில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நான்கு ராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எல்லப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நிறுத்தப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love