172
இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் இந்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாக இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன மத முரண்பாடுகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து காவல்துறை மா அதிபர் அனைத்து காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் சுற்று நிருபம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
Spread the love