179
ஜப்பான் வாழ் இலங்கை மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வாழ் இலங்கையர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கை வர்த்தகர்கள் வாகன இறக்குமதியாளர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கோரி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் கொள்கைகளினால் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ளார் என்பது குறி;ப்பிடத்தக்கது.
Spread the love