பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசாரதேரர் இனவாத கருத்து ஒன்றை சமூக ஊடக வலையமைப்பில் பதிவிட்டுள்ளார். இனவாத மற்றும் மாதவாத கருத்துக்களை வெளியிடும் தரப்பினருக்கு எதிராக கடுiமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் வெளியிட்டிருந்த அறிவிப்பினைத் தொடர்ந்தே ஞானசார தேரர் இவ்வாறு புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தம்மை கைது செய்ய முன்னதாக அமைச்சர்களான ரிசாட் பதியூதீன் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரை கைது செய்ய வேண்டுமென கோரியுள்ள அவர் தாம் காவல்துறையினருக்கு அஞ்சி செயற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை கைது செய்தால் அதற்கு ஆயத்தங்களுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் காவல்துறை மா அதிபர் மத்திய மலைநாட்டைச் சேர்ந்தவர் என்றும் தாம் தெற்கைச் சேர்ந்தவர் எனவும் முடிந்தால் தம்மை கைது செய்யுமாறு சவால் விடுவதாகவும் ஞானசார தேரர் காவல்துறை மா அதிபருக்கு சவால் விடுத்துள்ளார்.