இயற்கையுடன் இணைந்து செயற்பட இன்னும் கால அவகாசம் உண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக சுற்று சூழல்தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் நீண்ட காலம் வாழ்ந்து வந்தாலும் தாமும் இயற்கையின் ஓர் அங்கம் என்பதனை இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர் அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு மனிதனின் தேவையற்ற செயற்பாடுகளே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவுகள், மழை வெள்ளம் மற்றும் வரட்சி காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுவதாகவும் இயற்கை அனர்த்தத்தின் செய்தியை மக்கள் புரிந்து கொண்டு அதற்கு எதிராக செயற்படுவது முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.