195
வவுனியா சிறைச்சாலையில் இருந்து இறந்து போன சந்தேக நபா் தொடர்பில் அவருடன் கைதான சந்தேகநபா்கள் சாட்சியமளிக்கும் போது சிறைக்காவலரும் கைதிகள் சிலருமே அடித்துக் கொன்றனர் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.
கடந்தமாதம் குற்றச் செயலுடன் தொடர்புபட்டவர் எனும் சந்தேகத்தின் பெயரில் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மூவரில் ஒருவர் சிறையில் இறந்த நிலையில் மீதி இருவரும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப் பட்ட போதே சக சந்தேக நபர்கள் இவ்வாறு தெரிவித்தனர்
குறித்த நபரை சிறைக்காவலர் ஒருவர் தாக்கிய பின்னர் சிலமாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் களஞ்சியத்தை உடைத்து கஞ்சாவை திருடிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரும் அவரது கை, கால் என்பவற்றை கட்டிவைத்து தலையில் தும்புத்தடியால் தாக்கினார்கள் எனவும் அதனாலேயே அவர் இறந்துள்ளார் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த வழக்கை விசாரித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி சந்தேக நபர்கள் இருவரதும் வாக்குமூலங்களை பொலிசார் பதிவு செய்ய உத்தரவிட்டதுடன் மீண்டும் எதிர்வரும் ஏழாம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டுள்ளார்
Spread the love