186
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன எதிர்வரும் மாதம் பங்காளதேஸிற்கு செல்ல உள்ளார். பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இலங்கை ஜனாதிபதி பங்களாதேஸிற்கு செல்ல உள்ளார்.
ஜூலை மாதம் 13ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் நான்கு நாட்கள் ஜனாதிபதி மைத்திரி பங்களாதேஸில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த பயணத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love