படையினர் பழிவாங்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் தினேஸ் குணவர்தன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சர்வதேச சமூகத்தை திருப்தி படுத்தும் நோக்கில் படையினர் பழிவாங்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானம், இலங்கையின் இறைமைக்கும் குந்தகம் ஏற்படுத்தக் கூடியது எனவும் தீர்மானத்திற்கு ஆதரவளித்த தரப்பினரை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சில படையதிகாரிகளை கைது செய்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் சில படைதிகாரிகளை காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்து வருவதாகக் குறிப்பிடப்பிட்ட அவர் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுமாறு கோரி வரும் நாடுகள், இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.