ஜெனீவா பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணங்கவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். தீர்மானம் தொடர்பிலேயே இலங்கை இணங்கியதாகவும், தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் பரிந்துரைகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு இணங்குவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் உள்ளக விசாரணைப் பொறிமுறைமக்கும் மட்டுமே இணக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.