தேவை என்றால் கட்டார் வாழ் இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள ராஜதந்திர மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமையினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் எனினும், இலங்கையர்கள் எவரேனும் கட்டாரிலிருந்து நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கட்டாரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கட்டாரில் சுமார் 1லட்சத்து 40ஆயிரம் இலங்கையர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.