இந்தியாவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை 24ம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் ஜூலை 17ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து, இது குறித்த அறிவிப்பை வெள்pயிட்டள்ளார்.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடர்பாக ஜூன் 14ம் திகதி அறிக்கை வெளியிடப்படும் எனவும் அன்றே வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 17-ம் திகதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஜூலை 20ம்திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.